சென்னை: தென்னிந்திய சினிமாவிலும், பாலிவுட்டிலும் Srileela எழுச்சியடைந்துவருகிறார். தற்போது ரன்வீர் சிங்குடன் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இது அவருடைய முதல் ஹிந்தி படம் வெளியாவதற்கும் முன்பே கிடைத்த பெரிய வாய்ப்பாகும். பாபி தியோல், ரன்வீர் சிங் உள்ளிட்டோர் நடிக்கும் படத்தில் முன்னணி நாயகியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாராம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.பாலிவுட்டில் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக அறிமுகமாகும் அவரது முதல் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும். இதையடுத்து, பவன் கல்யாணுடன் "உஸ்தாத் பகத் சிங்", ரவி தேஜாவுடன் "மாஸ் ஜதாரா" மற்றும் தமிழில் "பராசக்தி" உள்ளிட்ட பல பிரமாண்டமான படங்களில் அவர் நடித்து வருகிறார்.