ஜோகூர் பாரு,
Jalan Johor Bahru- Air Hitam சாலையில் இன்று காலை நிகழ்ந்த கடுமையான விபத்தில், ஒரு e-hailing கார் டிரைவர் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு பயணி உயிரிழந்தனர்.
“இன்று காலை 11.27 மணியளவில் ஜோகூர் பாருவிலிருந்து ஸ்கூடை நோக்கி சென்றிருந்த Perodua Bezza கார், கட்டுப்பாட்டை இழந்து Mitsubishi Fuso லாரியின் இடது பின்பகுதியை மோதி விபத்துக்குள்ளானது.” என வடக்கு ஜோகூர் பாரு மாவட்டக் காவல் தலைவர் ஏ.சி.பி. பால்வீர் சிங் மகிந்தர் சிங் தெரிவித்ததார்.
விபத்தில் 48 வயதான மலேசிய டிரைவர் சம்பவ இடத்திலேயே தலையில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்தார். காரில் இருந்த 27 வயதான சிங்கப்பூர் பிரஜையான பயணி, ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானா அமினா மருத்துவமனையில் (HSA) சிகிச்சை பெற்று கொண்டிருந்தபோது உயிரிழந்தார்.
லோரி ஓட்டுநர், 28 வயதான ஒரு மலேசியர், அவருக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை.
இந்த விபத்துக்கான விசாரணை, சாலைச் சட்டம் 1987ன் பிரிவு 41(1) – “அபாயகரமான ஓட்டத்தால் மரணம் ஏற்படுத்துதல்” என்ற பிரிவின் கீழ் தொடரப்படுகிறது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தகவல்கள் உள்ளவர்கள் காவல் துறை விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் ஜுல்ஹிஷ்யாம் அசிஸை 019-7432966 என்ற எண்ணில் தொடர்புகொண்டு உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.