குவாந்தான்,
“Ops Samseng Jalanan”,” என்ற அதிரடி வீதி சோதனை குவாந்தான் நகரிலும் ஜாலான் குவாந்தான் பைபாஸ் சாலையிலும் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை, எட்டு மணி நேரம் நடைபெற்றபோது போலீசார் 139 போக்குவரத்து குற்றச்சாட்டுகளுக்கான சம்மன்களை வழங்கினர்.
19 மோட்டார் சைக்கிள்கள் சீல் வைக்கப்பட்டதோடு, 60 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக குவாந்தான் இடைக்கால போலீஸ் தலைவர் மொஹமட் அட்லி மாட் டாவுத் தெரிவித்தார்.
இந்த சோதனையின்போது, ஹோண்டா EX5 பைக்கில் சக்கரத்தை தூக்கி ஓட்டி வந்த 20 வயது ஒரு இளைஞரும் மற்றும் 24 வயது வேலை இல்லாத அவரது காதலியும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் 1987 சாலை பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 42(1)இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் வகையில், குவாந்தான் போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.