சென்னை,விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திரைப்படமான ”கண்ணப்பா” கடந்த மாதம் 27-ம் தேதி வெளியானது. தற்போது அதன் திரையரங்கு ஓட்டம் முடிவடைய உள்ளநிலையில், ரசிகர்கள் அதன் ஓடிடி வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையில், விஷ்ணு ஒரு காலத்தில் தான் செய்ய விரும்பிய மற்றொரு லட்சிய படமான ராமாயணத்தை பற்றிய விவரங்களை பகிர்ந்தார்.
சமீபத்திய ஒரு நேர்காணலில் விஷ்ணு மஞ்சு, கடந்த 2009-ம் ஆண்டில், தானும் இயக்குனர் கே. ராகவேந்திர ராவும் ராவணனை மையமாகக் கொண்ட ஒரு படத்தைத் திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தார். முழு ஸ்கிரிப்ட் முடிக்கப்பட்டபோதிலும், அதிக பட்ஜெட் காரணமாக அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல்போனதாக கூறினார்.
மேலும் இதில் சூர்யாவை ராமராகவும், ஆலியா பட்டை சீதையாகவும் கற்பனை செய்ததாகவும், அது குறித்து சூரியாவிடம் விவாதித்ததாகவும் விஷ்ணு கூறினார். விஷ்ணுவே அனுமனாக நடிக்க விரும்பியதாகவும் ஆனால் ராகவேந்திர ராவ் அவரை இந்திரஜித் வேடத்தில் நடிக்க பரிந்துரைத்ததாகவும் கூறினார்.
விஷ்ணு மஞ்சுவின் ராமாயண திரைப்பட கதாபாத்திரங்கள்:-
ராமர் – சூர்யா
சீதா – ஆலியாபட்
ராவணன் – மோகன் பாபு
இந்திரஜித் – கார்த்தி
லக்சுமணன் – கல்யாண் ராம்
ஜடாயு – சத்யராஜ்
விஷ்ணு மஞ்சுவின் இந்த நீண்டகால கனவுத் திட்டம் உயிர் பெறுமா என்பதை பொருத்திருந்து பார்போம்.