அத்திவராத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ஜீட் வின், பரிமேட்ச், லோட்டஸ் 365 போன்ற சட்டவிரோத சூதாட்ட செயலிகள் மூலம் நடந்த பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக நடந்து வந்த விசாரணையில், இந்த செயலிகளுக்கு விளம்பரமாக இருந்த பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ரூ.3 கோடி வரை இழந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் வங்கி மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டு, சட்டவிரோத சூதாட்ட செயலிகளை ஊக்குவித்தது குறித்த முறையீடுகளின் அடிப்படையில், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.இதனையடுத்து, வரும் ஜூலை 30 முதல் பிரபலங்களை விசாரணைக்கு ஆஜராகும்படி கூறி, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.