ஹனோய்:பிலிப்பைன்ஸ் கடலில் உருவான விபா புயல் நேற்று வியட்நாமில் கரையை கடந்த போது, சூறாவளியாக மாறி, அந்நாட்டில் பலத்த காற்றுடன் மழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திஉள்ளது.தென் கிழக்கு ஆசிய தீவு நாடான பிலிப்பைன்சுக்கு வடக்கே விபா புயல் உருவானது. இது தைவான், ஹாங்காங் நாடுகளுக்கு அருகே நகர்ந்து, அங்கெல்லாம் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று காலை வியட்நாம் கரையை நோக்கி நகர்ந்தது. மணிக்கு, 140 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் சூறாவளியாக சுழன்றடித்தது.