அலோர் ஸ்டார் அருகே உள்ள தாமான் கோல்ஃப் என்ற இடத்தில் இன்று ஒரு வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் ஓட்டிச் சென்ற பல்நோக்கு வாகனம் (SUV) மோதியதில் ஒரு போலீஸ் கார்போரல் கொல்லப்பட்டார். கெடா காவல்துறைத் தலைவர் அட்ஜ்லி அபு ஷா கூறுகையில், ஹபீசுல் இஷாம் மஸ்லான் (35) நான்கு சந்தேக நபர்களுடன் வந்த லெக்ஸஸ் எஸ்யூவி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று பெர்னாமா தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்குரிய வீடு திருட்டு தொடர்பாக பிற்பகல் 3.30 மணிக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாக அவர் கூறினார். கெடா காவல் படையின் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கொண்ட குழு இரண்டு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு சென்றபோது தப்பி ஓட முயன்ற சந்தேக நபர்கள் போலீஸ்காரரை மோதினர். அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார் என்று அட்லி கூறினார்.
சம்பவ இடத்திலேயே ஒரு சந்தேக நபரை மட்டுமே போலீசாரால் கைது செய்ய முடிந்தது. மற்ற மூவரும் எஸ்யூவியில் தப்பியோடி கப்பாளா பத்தாஸில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே அந்த வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கு வயதான தம்பதி வந்த காரை மடக்கி, மிரட்டி அதிலிருந்த ஓட்டுநரான கணவரை அந்த இடத்திலேயே விட்டு விட்டு அவரின் மனைவியை மட்டும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
பின்னர் கப்பாளா பத்தாஸில் வாகனம் விபத்தில் சிக்கியதால் மீதமுள்ள அனைத்து சந்தேக நபர்களையும் போலீசார் வெற்றிகரமாக கைது செய்தனர் என்று அட்லி கூறினார். 24 முதல் 26 வயதுடைய சந்தேக நபர்கள் மீது கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 மற்றும் வீடு திருடுவதற்கான அதே சட்டத்தின் பிரிவு 457 இன் கீழ் விசாரிக்கப்படும்.
சந்தேகத்திற்குரிய 26 வயதான தலைவனுக்கு திருட்டு, கார் திருட்டு, போதைப்பொருள் குற்றங்கள் 77 முன் தண்டனைகள் உள்ளன. மற்ற மூன்று சந்தேக நபர்களுக்கும் முந்தைய குற்றப் பதிவுகள் உள்ளன. சந்தேக நபர்கள் நாளை காவலில் வைக்கப்படுவார்கள்.
தெரெங்கானுவின் செட்டியுவைச் சேர்ந்த உயிரிழந்த போலீஸ்காரரான ஹஃபிசுல், 15 ஆண்டுகளாக இத்துறையில் பணியாற்றி வருகிறார். அவருக்கு மனைவியுன் நான்கு, ஒன்பது, 11 வயதுடைய மூன்று மகன்களும் உள்ளனர்.