சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா மற்றும் லட்சுமி மஞ்சு ஆகியோருக்கு அமலாக்கதுறை சம்மன் அனுப்பியது.
ஐதராபாத் காவல்துறை தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, லட்சுமி மஞ்சு, பிரகாஷ் ராஜ், நிதி அகர்வால், அனன்யா நாகல்லா மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்ரீமுகி உள்ளிட்ட 36 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதா மற்றும் அது பணமோசடியுடன் தொடர்புடையதா என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து ஜூலை 23-ம் தேதி ராணா டகுபதியும் ஜூலை 30-ம் தேதி பிரகாஷ்ராஜும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரம் செய்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் தேவரகொண்டா ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.