கூச்சிங்,
68வது தேசிய தினத்தையொட்டி, சரவாக் மாநிலம் முழுவதும் திறக்கப்படும் கவுண்டர்களில் போக்குவரத்து Summons களுக்கு 50% தள்ளுபடி வழங்கப்படும் என்று PDRM சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தள்ளுபடிகள், வீதி போக்குவரத்து விதிகள் (Compounding of Offences) பிரிவு 2003 கீழ் அபராதம் விதிக்கக்கூடிய Summons-களுக்கு மட்டுமே பொருந்தும் என சரவாக் மாநில துணை காவல்துறை ஆணையர் சைபுல்லிசான் இஷாக் தெரிவித்துள்ளார்.
“இது மக்களின் நிதிச்சுமையை குறைக்கவும், நிலுவையிலுள்ள Summons-களை தீர்த்துவைக்க மக்களை ஊக்குவிக்கவும் நோக்கமுள்ளதாகும்,” என்று அவர் கூறினார்.
ஆகஸ்ட் 26 முதல் 28 வரை மட்டுமே இந்த தள்ளுபடி வசதிகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Kuching, Padawan, Kota Samarahan, Serian, Lundu, Sri Aman, Lubok Antu, Betong, Saratok, Sarikei, Meradong, Sibu, Julau, Kapit, Dalat, Mukah, Tatau, Bintulu, Belaga, Miri, Limbang மற்றும் Lawas ஆகிய காவல் நிலையங்களில் இந்த தள்ளுபடியை பெற மக்களுக்கு அறிவித்தல் வழங்கப்படுகிறது.
மேலும் விபத்துகள், வழக்குத் தொடர் குற்றங்கள், ஆபத்தான முறையில் ஓவர்டேக் செய்தல், அவசர வழியை பயன்படுத்துதல், சிவப்பு விளக்கை மீறுதல், இரட்டை கோடுகளில் ஓவர்டேக் செய்தல் போன்ற குற்றங்களுக்கு இந்த தள்ளுபடி பொருந்தாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்கள் Summons-களை தீர்த்துவைக்கலாம் என PDRM கேட்டுக்கொண்டுள்ளது.