Offline
சீனப் பெண்ணிடம் RM2.1 மில்லியன் கொள்ளை – இருவர் மீது குற்றச்சாட்டு
By Administrator
Published on 08/09/2025 09:00
News

கோலாலம்பூர்,

RM2.1 மில்லியன் மதிப்புள்ள சொத்துகளை கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு அபகரித்ததாக இரண்டு நண்பர்கள் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

30 வயதான மொஹ்த் ஷாக்கிர் மற்றும் 34 வயதான நூர் முகமட் மஷார் ஆகியோர், இன்னும் கைதுசெய்யப்படாத இருவருடன் சேர்ந்து, சீன பிரஜை சென் கெசூ (31) என்பவரிடம் கொள்ளை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

RM1.2 மில்லியன் மதிப்புள்ள பிராண்டு கை கடிகாரம், 300 கிராம் தங்கம், RM100,000 பணம், ஐந்து மொபைல் போன்கள் என்பவை அந்த பெண்ணிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

இந்த சம்பவம் ஜூலை 21ஆம் தேதி இரவு 10.10 மணியளவில் புக்கிட் டாமன்சாரா பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 395 இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை மற்றும் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

இந்த இரண்டு சந்தேக நபர்களுக்காக வழக்கறிஞர் ஹஸ்வான் ஹசான் வாதம் புரிந்து , தங்களது இருவருக்கும் RM10,000 முதல் RM15,000 வரை ஜாமீன் வழங்க கோரினார். இருவரும் மாதம் RM2,000 சம்பளம் மட்டுமே பெறுபவர்கள் என்றும், குடும்பத்தை இவர்களே கவனிக்கவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தார்.

நீதிபதி ஒவ்வொரு சந்தேகநபருக்கும் RM15,000 ஜாமீனை, கூடுதல் நிபந்தனைகளுடன் வழங்கி, வழக்கை செப்டம்பர் 30க்கு ஒத்திவைத்தார்.

Comments