Offline
போலி மலேசிய ஓட்டுநர் உரிமத்துடன், ஆடம்பர கார் ஓட்டிய வெளிநாட்டு நபர் கைது – JPJ
By Administrator
Published on 08/11/2025 08:00
News

கோலாலம்பூர்,

சாலை போக்குவரத்து துறை (JPJ) கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிந்த ‘Ops Luxury 3.0’ ஆபரேஷனில் பல குற்றச்சாட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் ஒரு வெளிநாட்டு நபர், போலி மலேசிய ஓட்டுநர் உரிமம் மூலம் ஆடம்பர வாகனத்தை ஓட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்த நடவடிக்கையில், காப்பீடு இல்லாததும், காலாவதியான சாலை வரி கொண்டதும் உள்ள பல ஆடம்பர வாகனங்களை ஓட்டிய 9 வெளிநாடுவாசிகள் பிடிக்கபட்டனர் என JPJ தெரிவித்துள்ளது.

“மிகவும் மோசமான குற்றம் என்னவென்றால், தென் ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான போலி மலேசிய ஓட்டுநர் உரிமம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உரிமம் எவ்வாறு பெறப்பட்டது என்பதற்கான விரிவான விசாரணைகள் நடைபெறும்,” மேலும், இந்த போலி ஆவணத்தை உருவாக்கும் ஒரு குழு இருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் நாங்கள் கண்டுபிடிக்க முயற்சிப்போம் என JPJ அறிக்கை வெளியிட்ட்து.

மொத்தம் 9 வெளிநாடடவர்களுக்கும் உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. JPJஇன் இந்த விசாரணையில் மலேசிய குடிநுழைவு துறையும் தொடர்புடைய அமைப்புகளும் இணைந்து பணியாற்றும் திட்டம் உள்ளது. போக்குவரத்து சட்டத்தை மீறும் எந்த நபருக்கும், வெளிநாட்டவர்களுக்கும் கூட JPJ தளர்வு காட்டாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments