சென்னை,தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் சமீபத்தில் குபேரா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மைசா என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
நடிகை ராஷ்மிகா மீது திரை உலக ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு ஈர்ப்பு இருக்கிறதோ அதே அளவிற்கு டிரோல்களுக்கும் ராஷ்மிகாவிற்கும் பிரிக்க முடியாத உறவு இருந்து வருகிறது. அடிக்கடி அவருக்கு எதிராக டிரோல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து ராஷ்மிகா அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் உணர்வுபூர்வமான நபர். அதை நான் வெளியில் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அப்படி செய்வதால் ராஷ்மிகா கேமராவுக்காக செய்கிறார் என்று கூறுகிறார்கள். எனக்கு எதிராக டிரோல் செய்வதற்கு பணம் கொடுக்கப்படுகிறது. சிலர் ஏன் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்கிறர்கள் என தெரியவில்லை. என்னை வளரவிடாமல் தடுக்கின்றனர். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. என் மீது அன்பு காட்ட முடியாவிட்டாலும், அமைதியாக இருங்கள். இவ்வாறு அவர் தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.