Offline
ஜாசினில் ஆயுத மோதல் – நால்வர் கைது
By Administrator
Published on 08/17/2025 09:00
News

ஜாசின்

ஜாசின்-பெம்பான் (Jasin-Bemban) சாலையோரத்தில் நேற்று ஏற்பட்ட ஒரு விபத்துக்குப் பின் கைத்தடிகளையும் , கம்பிகளையும் பயன்படுத்தி கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் காலை 9 மணியளவில் நடந்ததாகவும், மொத்தம் ஏழு பேர் இந்த கலவரத்தில் ஈடுபட்டதாகவும், விபத்தில் Volkswagen Passat, Mitsubishi Triton மற்றும் பொதுமக்களின் Toyota Vios என மூன்று வாகனங்கள் தொடர்புபட்டிருந்தாகவும் மலாக்கா மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ த்சுல்கைரி முக்தார் (Datuk Dzulkhairi Mukhtar) தெரிவித்தார்.

எங்களுக்கு காலை 9 மணியளவில் விபத்து குறித்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், ஒரு நபர் கைத்தடியுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்,” என்று அவர் கூறினார்.

கலவரத்துக்குப் பிறகு ஐந்து சந்தேகநபர்கள், எண் தெரியாத Proton Exora வாகனத்தில் தப்பிச் சென்றதாகவும், Mitsubishi Triton வாகனம் சம்பவ இடத்திலேயே கைவிடப்பட்டதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

போலீசார் உடனடியாக இரு சந்தேகநபர்களை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். பின்னர், மேலும் இருவரை ஜாசின் மாவட்டக் காவல் தலைமையக வளாகத்தில் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், 20 வயது கொண்ட சந்தேகநபருக்கு முன்னதாக நான்கு குற்றச்செயல் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது. எனினும், அனைவரும் போதைப்பொருள் பரிசோதனையில் எதிர்மறை (negative) முடிவு பெற்றுள்ளனர்.

மீதமுள்ள மூன்று சந்தேகநபர்களைக் கண்டறிந்து கைது செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வழக்கு, குற்றவியல் சட்டம் பிரிவு 148 (பொது இடத்தில் கலவரம்) கீழ் விசாரிக்கப்படுகிறது.

Comments