கோலாலம்பூர்,
தேசிய மாதத்தை முன்னிட்டு, ஜாலூர் கெமிலாங்கை (தேசியக் கொடி) பெருமையுடன் பறக்கவிட்டு தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்த பொதுமக்கள் தயங்க வேண்டாம் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்ஸில் வலியுறுத்தினார்.
சிலர் அச்சத்தை உருவாக்க முயன்றாலும் அது மக்களின் நாட்டுப்பற்றை சிதைக்கக் கூடாது.
“ஜாலூர் கெமிலாங்கை பறக்கவிட பயப்பட வேண்டாம். அதை நினைத்து பெருமைப்பட வேண்டும். யாரும் நமது ஒற்றுமையை குலைக்கவோ, மிரட்டவோ அனுமதிக்கக் கூடாது. இந்த தேசிய மாதத்தில் முக்கியமானது நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை சூழலை நிலைநிறுத்துவதே,” என்றார்.
ஜாலூர் கெமிலாங்கை அவமதிக்கும் எந்தச் செயலையும் அரசு கடுமையாகக் கருதும் என்றும், சட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் நினைவூட்டினார்.
பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது; அதிகாரிகள் தங்களது கடமையைச் செய்யுமென்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.