சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் வியாழக்கிழமை ஒரு வீட்டில் இறந்து கிடந்த 20 வயதுடைய பெண்ணின் கொலை தொடர்பாக போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவரின் தந்தை, USJ2 இல் உள்ள வீட்டின் இரண்டாவது மாடியில் அவரின் மகளை கண்டுபிடித்ததாக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் வான் அஸ்லான் வான் மமட் தெரிவித்தார். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
பிரேத பரிசோதனையில் பாதிக்கப்பட்டவரின் கழுத்தில் உள்ள ஹையாய்டு எலும்பில் (கழுத்தில்) இரத்தப்போக்கு ஏற்பட்டதால் இறந்ததாகக் காட்டியதாகவும், தசை மற்றும் எலும்பில் காணப்பட்ட காயங்கள் “கையால் கழுத்தை நெரித்தலுடன்” ஒத்துப்போவதாகவும் வான் அஸ்லான் கூறினார்.
கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது. மேலும் தகவல்களையும் குற்றத்திற்கான நோக்கத்தையும் பெற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் ஊகிக்க வேண்டாம் என்று பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.