Offline
திரையுலகில் சோகம்…பழம்பெரும் நடிகை ஜோதி சந்தேகர் காலமானார்
By Administrator
Published on 08/19/2025 09:00
Entertainment

சென்னை,மராத்தி திரையுலகில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. பழம்பெரும் நடிகை ஜோதி சந்தேகர் (69) காலமானார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் கடந்த 16-ம் தேதி மாலை 4 மணியளவில் காலமானார்.

ஜோதி பல படங்களிலும் மராத்தி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். 12 வயதில் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய அவர், மிகக் குறுகிய காலத்தில் தனது தனித்துவமான நடிப்புத் திறமையால் துறையில் அங்கீகாரம் பெற்றார்.

‘தோல்க, ‘திச்சா உம்பர்தா’ மற்றும் ‘மீ சிந்துதை சப்கல்’ போன்ற படங்கள் ஜோதிக்கு நடிகையாக நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. மராத்தி துறையிலிருந்து பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

இவரது மகள் தேஜஸ்வினி பண்டிட்டும் பிரபலமான மராத்தி நடிகை ஆவார். திப்தி கோன்சிகர் இயக்கிய 2015 ஆம் ஆண்டு வெளியாகி விருது பெற்ற ”திச்சா உம்பர்தா” திரைப்படத்தில் தாய்-மகள் இருவரும் நடித்தனர்.

 

Comments