Offline
அமெரிக்காவில் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா
By Administrator
Published on 08/21/2025 09:00
News

நடிகர் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலித்து வருவதாக திரை உலகில் சில ஆண்டுகளாக செய்திகள் பரவி வருகிறது. காதல் விவகாரங்களை இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் மறைமுகமாக உறுதிப்படுத்தினர். ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்து பொது நிகழ்ச்சிகளிலும், சினிமா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.இதுமட்டுமின்றி இருவரும் வெளிநாடுகளுக்கு ஒன்றாக அடிக்கடி சுற்றுலா செல்வதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் நியூயார்க்கில் சமீபத்தில் நடந்த இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் ஜோடியாக பங்கேற்றனர். இருவருக்கும் கிராண்ட் மார்ஷல்கள் என்ற சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. விழாவில் இந்திய தேசிய கொடியை பிடித்தபடி விஜய் தேவரகொண்டா கிரீம் நிற குர்தா பைஜாமாவிலும், ராஷ்மிகா சுடிதாரிலும் பங்கேற்றார்.

சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி நியூயார்க்கில் உள்ள எம்பயர் கட்டிடம் மூவர்ண கொடியின் வர்ணங்களில் ஒளிரச் செய்யப்பட்டது. இந்த விளக்குகளை விஜய் தேவரகொண்டா திறந்து வைத்ததுடன் அற்புதமான கட்டிடத்தில் நமது கொடியின் மூன்று வர்ணங்களை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது நாட்டின் மகத்துவம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் உலகம் முழுவதும் காட்டப்படுகிறது. இந்தியாவிற்காக வெளிநாடு வாழ் இந்தியர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை பார்ப்பது பெருமைக்குரிய விஷயம் என விஜய் தேவரகொண்டா கூறினார். நியூயார்க்கில் நடந்த இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் ஜோடியாக பங்கேற்ற காட்சிகள் வைரலாகி வருகிறது.

Comments