மாஞ்சோங்:
கடந்த மே மாதத்திலிருந்து பாலியல் வர்த்தகத்திற்காக 14 வயது இரட்டைச் சகோதரிகளை கடத்தியதாக இரு நண்பர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், 25 வயதான முகமட் முஸ்தாகிம் முகமட் ஸுபெர் மற்றும் 26 வயதான ஷாஸ்வானி முகமட் ஹாஷிம் ஆகியோர் ஸ்ரீ மஞ்சோங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி அஸிஸா அஹ்மாட் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர். குற்றச்சாட்டு இன்று நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.
விசாரணை பதிவுகளின்படி, 2025 மே 12 முதல் ஜூன் 15 வரை மஞ்சோங் மாவட்டத்திற்குட்பட்ட ஜாலான் உத்தாமா, மரினா ஐலண்ட், தெலுக் முரு, லூமுட் பகுதியில் குற்றம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வால், பாதிக்கப்பட்ட 14 வயது இரட்டைச் சகோதரிகள் கடுமையான மனரீதியிலும் உடல் ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், சம்பந்தப்பட்ட பிரிவுகள் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.