நகைச்சுவையில் மாபெரும் ஹிட் அடித்த கம்போ வடிவேலு - பிரபுதேவா. எங்கள் அண்ணா, மனதை திருடிவிட்டாய், காதலன் ஆகிய படங்களில் வடிவேலுவும் பிரபு தேவாவும் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.அதே போல் பிரபு தேவா இயக்கத்தில் வெளிவந்த போக்கிரி மற்றும் வில்லு ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் வடிவேலு நகைச்சுவையில் மிரட்டி இருப்பார்.25 வருடங்களுக்கு பின் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் இந்த கூட்டணி கிட்டதட்ட 25 ஆண்டுகளாக இணையாமல் இருந்தனர். சரியான கதை அமைந்தால் மீண்டும் இருவரும் இணைவோம் என கூறியிருந்த நிலையில், தற்போது இவர் கூட்டணி கைகோர்த்துள்ளது.இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் பிரபு தேவா - வடிவேலு புதிய படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தை தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை துபாயில் நடைபெற்றுள்ளது.