Offline
12 நாட்களில் கூலி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
By Administrator
Published on 08/27/2025 08:00
Entertainment

கூலி 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் கடந்த 14ம் தேதி திரையரங்கில் வெளிவந்தது. முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.இப்படம் முதல் நான்கு நாட்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டதட்ட ரூ. 400 கோடி வரை நான்கே நாட்களில் வசூல் செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் வெளிவந்த மற்ற நடிகர்கள் படங்களின் வசூல் சாதனையை கூட தொடர்ந்து முறியடித்து வருகிறது.தமிழை தாண்டி கன்னடம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்று வரும் கூலி, கேரளாவில் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி நஷ்டம் ஏற்படலாம் என்கின்றனர்.இந்த நிலையில், 12 நாட்களில் உலகளவில் கூலி படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை கூலி படம் உலகளவில் ரூ. 490 கோடி வசூல் செய்துள்ளது.

Comments