Offline
லண்டனில் இந்திய உணவகத்துக்கு தீ வைப்பு: 2 பேர் கைது
By Administrator
Published on 08/27/2025 09:00
News

லண்டன்,கிழக்கு லண்டனின் இல்பர்ட் பகுதியில் வுட்போர்ட் அவென்யூவில் அமைந்துள்ள இந்தியன் அரோமா என்ற உணவகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் தீ வைப்பு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 3 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் 5 பேர் காயம் அடைந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உணவகத்திற்கு தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவனும், 54 வயது நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து போலீசார் கூறுகையில், இந்த சம்பவத்தால் மக்கள் கவலையும், அதிர்ச்சியும் அடந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Comments