போலி பாலியல் வீடியோக்களை வெளியிடுவதைத் தடுக்க, மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு செனட்டருக்கும் 100,000 அமெரிக்க டாலர்கள் கேட்டு மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்ததாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
புகார் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.கே.ஆரைச் சேர்ந்த வோங் சென் (சுபாங்), டாக்டர் தௌஃபிக் ஜோஹாரி (சுங்கைப் பட்டானி), கெராக்கானைச் சேர்ந்த வோங் சியா ஜென் (குலிம்) என்றும், செனட்டர் நெல்சன் டபிள்யூ அங்காங் என்றும் புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் எம். குமார் தெரிவித்தார்.
மிரட்டி பணம் பறித்தல் மற்றும் நெட்வொர்க் வசதிகளை தவறாகப் பயன்படுத்துதல் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிஸி ரம்லி தான் தனக்கு மின்னஞ்சல் மிரட்டல் வந்ததாக முதலில் வெளிப்படுத்தினார். நேற்று இரவு மின்னஞ்சலில் தனது படம் ஒன்று இணைக்கப்பட்ட போலி வீடியோவின் ஸ்கிரீன் ஷாட் இருப்பதாக அவர் கூறினார்.
மின்னஞ்சல்களைப் பெற்ற மற்ற அரசியல்வாதிகள், தகவல் தொடர்பு அமைச்சரான லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபஹ்மி ஃபட்சில்; ஹங் துவா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் ஆடம் அட்லி; கோத்த கினாபாலு நாடாளுமன்ற உறுப்பினர் சான் ஃபூங் ஹின்; கோத்தா அங்கேரிக் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி; Seri Setia சட்டமன்ற உறுப்பினர் Fahmi Ngah, செனட்டர் மனோலன் முகமது ஆகியோர் ஆவர்.
இன்று மாலை, தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைபுல் வான் ஜான் தானும் குறிவைக்கப்பட்டதை வெளிப்படுத்தினார். மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமி இதே போன்ற மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாக தான் நம்புவதாகவும், ஆனால் அதை உணராமல் இருக்கலாம் என்றும் கூறினார்.