சென்னை,
தமிழ்நாட்டின் கொடைக்கானலில் ஒரு மலைப்பாங்கான சாலையில் சுற்றுலா வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 12 மலேசியர்கள் காயமடைந்தனர்; ஆனால் உயிரிழப்பு நிகழவில்லை என மலேசிய வெளியுறவு அமைச்சகம் (விஸ்மா புத்ரா) தெரிவித்தது.
விபத்தில் பலர் சிறிய காயங்களுக்கு உள்ளானர், நால்வர் படுகாயமடைந்தாலும், உயிருக்கு அபாயம் இல்லை. அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் உள்ளூரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
சென்னையில் உள்ள மலேசிய தூதரகம் உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் தேவையான உதவிகளை வழங்கியுள்ளது.
மலைப்பாங்கான சாலை நிலத்தடுப்பில் சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்ததுதான் விபத்க்கான காரணம் எனவும், பயணிகளை மழைக்காலத்தில், முக்கியமாக மலைப்பகுதிகளில் உள்ள சாலைகளில் கவனமாக இருக்கும்படி ஆலோசனை வழங்கியுள்ளது மலேசிய தூதரகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
மேலும், அவசர சூழ்நிலையில் உடனடியாக உதவிகள் பெற, பயணிகள் அருகிலுள்ள மலேசிய தூதரகத்தில் பதிவு செய்யவும், பயணக் காப்பீடு பெற்றுக் கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தொடர்பு தகவல்கள்:
மலேசிய துணைத் தூதரகம், சென்னை
தொலைபேசி: +91 44 2433 4434 / +91 44 2433 4435
மின்னஞ்சல்: mwchennai@kln.gov.my