Offline
Menu
ஆன்லைன் விளையாட்டில் ரூ.14 லட்சம் இழப்பு: 6-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
By Administrator
Published on 09/18/2025 09:00
News

லக்னோ,உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் 13 வயது சிறுவன். அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். ஆன்லைன் கேம் விளையாடுவதில் ஆர்வம் கொண்ட அவன் தினமும் அதில் மணிக்கணக்கில் செலவழித்து வந்தான். இந்தநிலையில் சிறுவனின் தந்தை தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக வங்கிக்கு சென்றார்.

அப்போது தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.14 லட்சமும் மாயமானது தெரிந்தது. இதுகுறித்து வங்கி ஊழியர்களிடம் கேட்டபோது ஆன்லைன் விளையாட்டில் பணம் இழந்தது தெரிந்தது. வீடு திரும்பிய அவர் இதுகுறித்து தனது மகனிடம் விசாரித்து கண்டித்தார். இதனால் மனமுடைந்த அந்த சிறுவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments