Offline
Menu
மலாக்காவில் 2 கிலோவிற்கும் அதிகமான போதைப் பொருள் பறிமுதல்
By Administrator
Published on 09/18/2025 09:00
News

அலோர் காஜா: மலாக்கா போலீசார், ஜாலான் இண்டஸ்ட்ரி ரும்பியாவில் ஒரு காருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெராயின், சியாபு என நம்பப்படும் 2 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை பறிமுதல் செய்ததோடு  அதன் தொடர்பில் ஆடவர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

31 வயதான சந்தேக நபர் செப்டம்பர் 12 ஆம் தேதி காலை 6.10 மணியளவில் மலாக்கா போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (NCID) ஒரு போலீஸ் குழுவால் கைது செய்யப்பட்டதாக அலோர் காஜா மாவட்ட காவல்துறையின் இடைக்காலத் தலைவர் டிஎஸ் அஸ்ருல் முகமது தெரிவித்தார். ஹோண்டா ஜாஸ் காரை ஆய்வு செய்தபோது, ​​2,129.30 கிராம் எடையுள்ள ஹெராயின் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 1,500 வெளிப்படையான பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் 96 கிராம் எடையுள்ள சியாபு போன்ற பொருட்கள் அடங்கிய 100 வெளிப்படையான பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் மொத்த பறிமுதல் மதிப்பு சுமார் 35,000 ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது என்று அவர் புதன்கிழமை (செப்டம்பர் 17) ஒரு அறிக்கையில் தெரிவித்தார். சுமார் 5,000 ரிங்கிட் மதிப்புள்ள பெனெல்லி 150 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்ததாக அஸ்ருல் கூறினார்.

Comments