அலோர் காஜா,
மலாக்கா போலீசார், Jalan Industri Rumbia பகுதியில் ஒரு காரில் மறைக்கப்பட்டிருந்த, இரண்டு கிலோவிற்கு மேற்பட்ட போதைப்பொருட்களை (ஹீரோயின் மற்றும் சியாபு என சந்தேகிக்கப்படுகிறது) கண்டுபிடித்தத்துடன் ஒரு நபரையம் கைது செய்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் RM35,000 ஆகும்.
31 வயதான அந்த சந்தேக நபரை செப்டம்பர் 12, காலை 6.10 மணியளவில் மலாக்கா போதைப்பொருள் குற்ற விசாரணைத் துறை (NCID) போலீசார் கைது செய்தனர் என அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் DSP அஸ்ருல் முகமட் கூறினார்.
அந்த காரை பரிசோதனை செய்த போது, 1,500 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் ஹெரோயின் 2,129.30 கிராம் அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், 100 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் சியாபு 96 கிராம் அளவில் இருந்தது. இதில், சுமார் RM5,000 மதிப்புமிக்க மோட்டார்சைக்கிள் Benelli 150உம் கைப்பற்றப்பட்டது.
இதனிடையே, தங்களது பகுதிகளில் போதைப்பொருள் பரிமாற்றம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்தால் அல்லது சந்தேகித்தால் NCID ஹாட்லைன் 012-2087222 மூலம் அளிக்குமாறு மலாக்கா போலீசார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.