நாட்டிலேயே முதல்முறையாக ரெயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) 2,000 கி.மீ. வரை பாயக்கூடிய இந்த வகை ஏவுகணைக்கு ரயில் அடிப்படையிலான மொபைல் லாஞ்சர் வடிவமைக்கப்பட்டு சோதிக்கப்பட்டது.
‘அக்னி பிரைம்’ ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதற்காக அதிகாரிகளுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.