கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) சமீபத்தில் நடத்திய கூட்டு சோதனையில், வெளிநாட்டவர்கள் இயக்கி வந்த மூன்று அனுமதியற்ற அழகு நிலையங்கள் மூடப்பட்டன.
நகரம் முழுவதும் இவ்வகை சட்டவிரோத தொழில்களை அடக்குவதற்கான நடவடிக்கையின் பகுதியாகவே இம்மூடல் மேற்கொள்ளப்பட்டது.
செல்லுபடியாகும் வேலை அனுமதிப் பத்திரமில்லாமல் வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்தல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக மொத்தம் 17 கூட்டு அபராத நோட்டிஸ் வழங்கப்பட்டன என DBKL தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையில் குடிநுழைவுத் துறையும், உள்நாட்டு வணிகம் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சகமும் இணைந்து செயல்பட்டன.
தனிப்பட்ட சோதனையில், குடிவரவு துறை 17 வெளிநாட்டவர்களை கைது செய்து, குடிநுழைவு முகாமில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரத்தில் இவ்வாறான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தொடரப்படும் என்றும் DBKL உறுதியளித்துள்ளது.