Offline
Menu
உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி
By Administrator
Published on 09/28/2025 09:00
News

கீவ்,கடந்த 2019ல் உக்ரைன் அதிபராக ஜெலன்ஸ்கி தேர்வு செய்யப்பட்டார். 2024 பிப்ரவரியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ரஷியாவுடனான போர் நீடிப்பதால் தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார். இந்த நிலையில் இதுதொடர்பாக பேசிய ஜெலன்ஸ்கி கூறியதாவது: , “ரஷியாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே முதல் இலக்கு.

போர் முடிவுக்கு வந்த பிறகு நான் அதிபர் பதவியில் இருந்து விலகி விடுவேன். அதன்பிறகு மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட மாட்டேன். ஏனெனில் தேர்தல் என்பது என்னுடைய இலக்கு அல்ல. மக்களுடன் துணை நிற்பதே என்னுடைய குறிக்கோள். போர் காலத்தில் உக்ரைன் மக்களுக்கு துணையாக நிற்க விரும்புகிறேன். போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு உக்ரைனில் தேர்தலை நடத்த கோருவேன். அப்போது தேர்தல் நடத்த வாய்ப்பிருக்கிறது ” என்று கூறியுள்ளார்.

Comments