Offline
Menu
மாணவர்களின் முழுமயான வளர்ச்சிக்கு விளையாட்டும் அவசியம்! சரவணன் பேச்சு
By Administrator
Published on 09/28/2025 09:00
News

கோலாலம்பூர்:

பிரிக்பீல்ட்ஸ் பூப்பந்து கிளப் ஆதரவில் கூட்டரசுப் பிரதேச மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கு இடையிலான பூப்பந்து போட்டியை மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இந்த போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி.

தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மத்தியில் பூப்பந்து போட்டியை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் இப்போட்டிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்கேற்ப, விளையாட்டிலும் ஈடுபட வேண்டும் இது அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு வழிவகுக்கு என்று அவர் தமது சமூகத்தள பக்கத்தில் புகைப்படங்களுட கருத்து பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த போட்டியில் 14 பள்ளிகளைச் சேர்ந்த 224 மாணவர்கள் பங்கெற்றனர் என்பது குறிப்பிடதக்கது.

Comments