Offline
Menu
டிரம்பை கடுமையாக விமர்சித்த கொலம்பியா அதிபரின் விசாவை ரத்து செய்தது அமெரிக்கா
By Administrator
Published on 09/29/2025 09:00
News

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. சபை ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டு பேசினார்கள். மேலும், பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபடுவதாக இஸ்ரேல் அரசுக்கு எதிராக பலவேறு நாட்டு தலைவர்கள் பேசினர். குறிப்பாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பல நாடுகள் அறிவித்தன.

இந்நிலையில், ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் பேசிய கொலம்பியா அதிபர் குஸ்டாவோ, “காசாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு டொனால்ட் ட்ரம்ப்பும் உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், கொலம்பியா அதிபர் குஸ்டாவோவின் விசாவை ரத்து செய்வதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது விசா ரத்து செய்யப்பட்டது குறித்து கொலம்பியா அதிபர் குஸ்டாவோ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இனப்படுகொலையை ஆதரிக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டதற்காக எனது விசா ரத்து செய்யப்பட்டள்ளது. இது அமெரிக்க அரசாங்கம் சர்வதேச சட்டத்திற்கு இணங்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இனிமேலும் ஐநா சபையின் தலைமையகம் நியூயார்க்கில் இருக்க முடியாது” என்று தெரிவித்தார்.

மற்றொரு பதிவில் டொனால்டு டிரம்பை ‘டொனால்டு டக்’ என்று கூறி கொலம்பியா அதிபர் குஸ்டாவோ கிண்டல் அடித்தார்.

Comments