Offline
Menu
கரூர் கூட்ட நெரிசல்: 8 பேர் கொண்ட குழுவை அமைத்தார் ஜே.பி.நட்டா
By Administrator
Published on 09/30/2025 09:00
News

புதுடெல்லி,கரூர் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார்.

இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். ஒன்றைப்படை எண்ணிக்கையில் தொடங்கிய பலி எண்ணிக்கை, படிப்படியாக அதிகரித்து, 41 ஆக உயர்ந்ந்துள்ள. கரூர் ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 51 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனிடையே கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.

அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தனது விசாரணையை நடத்தி வருகிறார். இந்தநிலையில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஹேமமாலினி எம்.பி. தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்தார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா .

அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ்லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே,அப்ரஜிதா சாரங்கி, ரேகா ஷர்மா, புத்த மகேஷ் குமார் ஆகியோர் பாஜக குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு விரைவில் கரூருக்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. கரூர் நெரிசலுக்கான காரணத்தை ஆராய்வதோடு பாதிக்கப்பட்டரோரையும் பாஜக குழு சந்திக்கும் என்று ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

Comments