Offline
Menu
இங்கிலாந்தில் காந்தி சிலை உடைப்பு – போலீசார் விசாரணை
By Administrator
Published on 10/01/2025 09:00
News

லண்டன்,இங்கிலாந்து நாட்டின் லண்டன் டவிஸ்டோக் சதுர்க்கத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. இந்த காந்தி சிலை நேற்று மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிலை அமைந்துள்ள பகுதியில் காந்தி, மோடி இந்திய பயங்கரவாதிகள் என எழுதப்பட்டிருந்தன.

இந்த சம்பவம் தொடர்பாக லண்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, லண்டனில் காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், டவிஸ்டோக் சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்ட நிகழ்வு வருத்தமளிக்கிறது. இந்த சம்பவத்தை கண்டிக்கிறோம். இந்த நிகழ்வில் தொடர்புடையவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments