ஷா ஆலம்,
போதைப் பொருள் விநியோக குற்றத்திற்கான மரண தண்டனையில் இருந்து இளைஞர் ஒருவர் விடுதலையாகி உள்ளார்.
இந்த குற்றத்திற்காக 4 ஆண்டுகள் சிறை தண்டனை மானுபவித்த சுக்தேவ் ஆறுமுகம் என்ற இளைஞனை இங்குள்ள உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
நீதிபதி டத்தோ அஸ்லாம் ஸைனூடின் அந்த தீர்ப்பை வழங்கினார்.
முன்னதாக கடந்த 2021 ஜூன் 20ஆம் தேதி செராசில் 118.8 கிராம் எடையிலான மெத்தாபெத்தமின் வகை போதை பொருள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பில்
ஜெயபிரகாஷ் ஆறுமுகம் என்ற மற்றொரு நபருடன் சுக்தேவ் மீது குற்றம் சாட்டப்பட்டார்.
இந்நிலையில் போலீஸ் சோதனயின் போது சுக்தேவ் அந்த இடத்தில் இல்லை. சோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகுதான் அவர் அந்த இடத்திற்கு சென்றதாக எங்கள் தரப்பு வாதம் உள்ளது.
குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளால சிறையில் முடங்கி இருந்த அவருக்கு தற்போது இந்த தீர்ப்பு மன நிம்மதியை தந்துள்ளது என சுக்தேவ் தரப்பு வழக்கறிஞர் மதன் ஆனந்தம் தெரிவித்துள்ளார்.