கோலாலம்பூர்:
கட்சிக்குள் இருந்து கொண்டே கலகம் விளைவிக்க முனையும் எந்தவொரு தலைவரும் உடனடியால நீக்கப்பட வேண்டும் என பெர்சத்து கூட்டமைப்பு பிரிவு வலியுறுத்தியுள்ளது.
துரோகங்கள் தொடர்ந்து நீடிப்பதையும் அக்கட்சி மீதான மக்கள் நம்பிக்கை உடைபடுவதையும் தடுக்க இந்த நடவடிக்கை அவசியமாகிறது.
குறிப்பாக சுய லாபத்திற்காக கட்சியை பலவீனப்படுத்த ஒரு சில தலைவர்கள் நமது அரசியல் எதிரிகளோடு கூட்டு வைத்து கொண்டிருக்கும் விவகாரம் மிகவும் பதற்றத்தை அளிப்பதாக பெர்சத்து கூட்டமைப்பு பிரிவு உதவித் தலைவர்
ஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் கருத்துரைத்தார்.
பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் கட்சியை பின்னால் குத்தும் இவர்கள் “பழத்தில் உள்ள முள்” போன்றவர்களாவர்.
அதே சமயம் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ முஹிடினின் மென்மையை பலவீனமாக கருதாதீர் என்று அவர் தமதறிக்கையில் குறிப்ட்டுள்ளார்.
மேலும் இந்த கட்சியானது ஊழல், கொடுங்கோல் அரசியல், ஆகியவற்றுக்கு எதிரான புனிதமான போராட்டத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள், உறுப்பினர்களுக்கு சொந்தமானதாகும்.
இதனை அதிகார வெறி பிடித்த சில தரப்பினரின் கைப்பாகயாக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என பெர்சத்து உச்சமன்ற உறுப்பினருமான ஸ்ரீ சஞ்சீவன் எச்சரித்தார்.