கோலாலம்பூர்:
பிலிப்பைன்ஸின் லெய்டே மாகாணத்தில் 6.9 ரிக்டர் அளவில் பதிவான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அதிர்வு சபாவின் சண்டாகானிலும் உணரப்பட்டது.
குறித்த நிலநடுக்கம் இரவு 9.59 மணிக்கு, பிலிப்பைன்ஸின் ஓர்மோக் நகரத்திலிருந்து வடமேற்கே சுமார் 50 கி.மீ தொலைவில், 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டது.
“சண்டக் கான் பகுதியில் நிலநடுக்க அதிர்வு உணரப்பட்டது. எனினும், மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை,” என்று மெட்மலேசியா தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.