புதுடெல்லி,தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ‘கர்மவீரர்’ காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“மாபெரும் தொலைநோக்கு சிந்தனையாளரான பாரத ரத்னா காமராஜரின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்ந்து வணங்குகிறேன். அவரது பணிவு, நேர்மை, விளிம்புநிலை மக்களின் கல்வி மற்றும் சமூக நீதிக்கான மேம்பாட்டிற்காக அவர் ஆற்றிய முன்னோடிப் பணிகள் தலைமுறை தலைமுறையாக நமக்கு ஊக்கமளித்து வருகின்றன.”இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.