கோலாலம்பூர்:
இன்று மாலை 5 மணி வரையில் நாட்டில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனத்த மழை, பலத்த காற்று அபாயம் உள்ளதாக மலேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், ஜொகூர், பெர்லீஸ்,கெடா, பேராக், திரெங்கானு, கிளந்தான், சபா, சரவாக் ஆகியவை அந்த மாநிலங்கள் ஆகும்.
சிலாங்கூரில் உலு சிலாங்கூர், கோம்பாக், உலு லங்காட், பெட்டாலிங், சிப்பாங் ஆகிய பகுதிகளிலும் நெகிரியில் ஜெலெபு, கோலா பில்லா, சிரம்பான், போர்ட் டிக்சன், ரெம்பாவ், ஜொகூரில் சிகாமாட், மெர்சிங், ஜொகூர் பாரு, கூலாய், பகாங்கில் கெமரன் மலை, , பெந்தோங், பெக்கான், குவாந்தான், ரொம்பின், பேராக்கில் லாருட், மாத்தாங், செலாமா, உலு பேராக், கோலா கங்சார், கிந்தா, கம்பார், பாத்தாங் பாடாங், முவாலிம் உள்ளிட்ட இடங்கள் இதில் அடங்கும்.