சிங்கப்பூர்,சிங்கப்பூரில் வசித்து வரும் திருப்பதி மோகன்தாஸ் (வயது 41) கட்டுமான தொழிலாளராக பணிபுரிந்து வந்தார். இந்தியரான அவர் கடந்த மே மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணை வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார்.
பின்னர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். ஆனால் அந்த பெண் கூச்சலிட்டதால் மோகன்தாஸ் அங்கிருந்து தப்பி ஓடினார். சம்பவம் நடந்த 2 நாள் கழித்து மோகன்தாஸ் மீண்டும் அங்கு சென்றுள்ளார்.
இதுகுறித்து பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். எனவே மோகன்தாசுக்கு 13 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.