Offline
Menu
வரவுசெலவு திட்டம் 2026: இந்திய சமுதாயத்திற்கான மேம்பட்ட நிதி உதவிகள்
By Administrator
Published on 10/11/2025 12:43
News

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கான பல்வேறு மேம்பட்ட உதவிகளை இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

STR மற்றும் SARA பண உதவித் திட்டங்கள் – 2022-இல் RM600 மில்லியனாக இருந்த ஒதுக்கீடு தற்போது RM1 பில்லியனாக உயர்த்தப்பட்டது.

SJKP வீட்டுக்கடன் உத்தரவாதம் – 2022 முதல் 2024 வரை RM200 மில்லியனிலிருந்து RM1.9 பில்லியனாக அதிகரித்தது.

சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் – MITRA, TEKUN, AIM போன்ற நிறுவனங்கள் மூலம் RM220 மில்லியன் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இந்த மேம்பட்ட நிதி ஆதரவு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதோடு, இந்திய சமூகத்தை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் உறுதியான முயற்சியை பிரதிபலிக்கிறது.

Comments