கோலாலம்பூர்:
2025 ஆர்திக் பொது பூப்பந்து போட்டியின் மகளிர் இணையர் பிரிவு இறுதி சுற்றுக்கு தேசிய இணையர்களான எம். தீனா – பெர்லி டான் தேர்வு பெற்றுள்ளனர்.
முன்னதாக இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் அவர்கள் தைவான் இணையரை தோற்கடித்து இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றனர்.
குறிப்பாக இப்போட்டியின் இரண்டாவது தேர்வான தேசிய இணையர் முதல் செட் ஆட்டத்தில் 22-24 என்ற புள்ளி கணக்கில் தோல்வி கண்டனர்.
தொடர்ந்து இரண்டாம் செட் ஆட்டத்தில் தேசிய இணையர் மீட்டெழுந்து வெற்றி பெற்றதை அடுத்து ஆட்டம் மூன்றாவது செட்டுக்கும் சென்றது.
அந்த செட் ஆட்டத்திலும் தேசிய இணையர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் இறுதி சுற்றில் தேசிய இணையர் ஜப்பான் இணையரை எதிர்கொள்ளவிருக்கின்றனர்.