ரவூப்:
போலீசாரான் துரத்தப்பட்ட 2 உள்நாட்டு ஆடவர்களும் 3 வெளிநாட்டு பெண்களும் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பயணித்த வாகனம் டோங் போலீஸ் நிலையம் முன்புறம் கந்ததை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
முன்னதாக குவா மூசாங், ஜாலான் தானா பூத்தே சாலையில் புரோட்டோன் பிரிவி ரக கார் ஒன்று சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதை மாவட்ட முன்சீப் உடன் ஸ் தலைமையகத்தை சேர்ந்த எம்பிவி பிரிவினர் கண்டனர்.
போலீசார் அந்த காரை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.
ஆனாலும் கார் ஓட்டுனர் அதற்கு செவி சாய்க்காமல் வாகனத்தை ரவூப் நோக்கி வேகமாக ஓட்ட தொடங்கினார்.
இருப்பினும் அந்த கார் டோங் போலீஸ் நிலைய முன்புறம் சமிஞ்சை விளக்கு தூண், மற்றொறு வாகனத்தை மோதி கவிழ்ந்தது.
பின் போலீசார் அந்த காரை சோதனையிட்ட போது அதில் முறையான ஆவணங்கள் இன்றி 3 இந்தோனேசிய பெண்கள் இருந்தது தெரிய வந்தது என்று ரவூப் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஷாரீல் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
மேலும் 34 யாபா வகை மாத்திரைகளும் ஒரு பாக்கெட் ஷாபு வகை போதை பொருளும் அந்த காரில் இருந்தன.
இது தவிர, அந்த கார் பதிவு எண்ணும் போலி என்பது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் அந்த 2 உள்நாட்டினரும் பணம் பெற்று அந்நிய பிரஜைகளை கிளந்தானிலிருந்து கோலாலப்பூருக்கு அழைத்து வரும் வேலை செய்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதனயடுத்து 2007 மனித கடத்தல் – கள்ளக்குடியேறிகள் ஊடுருவல் தடுப்பு சட்டம் பிரிவு 26J, 1959/63 குடிநுழைவு சட்டம் 6(1)(சீ), 1952 அபாயகர போதை பொருள் தடுப்பு சட்டம் பிரிவு 12(2), ஆகியவற்றின் கீழ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இது தவிர அந்த 2 உள்நாட்டினரும் 2012 (சிறப்பு நடவடிக்கைகள்) பாதுகாப்பு குற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார் அவர்.