ஜோகூர் பாரு: சிம்பாங் ரெங்காமில் உள்ள கெனாங்கன் மசூதிக்கு முன்னால் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த வேளையில் மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். பெரோடுவா கஞ்சில், டொயோட்டா ஹிலக்ஸ், ஃபோர்டு தொழிற்சாலை வேன் ஆகியவை விபத்தில் சிக்கியதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
பெரோடுவா கஞ்சில் இருந்த ஓட்டுநர் மற்றும் பயணி, 51 வயதான ருலிஜா அகமது மற்றும் 15 வயதான சலாம் நோராஸ்லி ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் ஒன்பது வயது சிறுவன் ஒசாமா நோராஸ்லி என்ற மற்றொரு பயணி காயமடைந்தார் என்று துறை இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொழிற்சாலை வேனின் ஓட்டுநர் பி. சந்திரன், 53 காயமடைந்தார். அதே நேரத்தில் டொயோட்டா ஹிலக்ஸ் காரை ஓட்டிச் சென்ற ஒருவரை வழிப்போக்கர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பு பொதுமக்கள் அனைவரும் வாகனங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.