தற்போது ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு பல துறைகளில் கால்பதித்துள்ளது. ஏஐ-யை பயன்படுத்தி விரைவாகவும், துல்லியமாகவும் பணிகளை செய்ய முடிகிறது என்பதால் ஏஐ பயன்பாடு அதிகரித்து வருகிறது. சாட் ஜிபிடி, ஜெமினி, பிரெப்ளிக்சிட்டி பல்வேறு நிறுவனங்கள் ஏஐ துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. எந்த தகவலை கேட்டாலும் எளிதாக தேடி தருவதால், பயனர்கள் மத்தியிலும் ஏஐக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் உலக அளவில் பல்வேறு நிறுவனங்களும் ஏஐ துறையில் தடம் பதிக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
அந்த வகையில், இந்தியாவின் மிகப்பெரும் தொழில் நிறுவனமான ரிலையன்ஸும் ஏஐ துறையில் கால் பதித்துள்ளது. கூட்டு முயற்சியின் கீழ் “ ரிலையன்ஸ் இண்டெலிஜன்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய ஏஐ நிறுவனத்தில் ரிலையன்ஸ் 70 சதவீத பங்குகளையும், மெட்டா 30 சதவீத பங்குகளையும் வைத்து இருக்கும். முதல் கட்டமாக இரு நிறுவனங்களும் சேர்ந்து ரூ.855 கோடி முதலீட்டை செய்ய உள்ளன. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஏஐ- இந்தியா சந்தைகளில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.