Offline
Menu
கணவர் போல் நடித்த நபரிடம் RM100,000 இழந்த பாலர்பள்ளி ஆசிரியை
By Administrator
Published on 10/28/2025 11:18
News

வாட்ஸ்அப் மோசடி: கணவர் போல் நடித்த நபரிடம் மழலையர் பள்ளி ஆசிரியை RM100,000 இழந்தார்

ஜோகூர் :

பாலர்பள்ளி ஆசிரியை ஒருவர், தனது கணவர் போல் நடித்த நபரின் வாட்ஸ்அப் செய்திகளை நம்பி RM100,000 இழந்தார்.

52 வயதான பெண் ஒருவர், தனியார் நிறுவனத்தின் பொது மேலாளரான தனது “கணவரிடமிருந்து” வாட்ஸ்அப் மூலம் வந்த செய்தியில், “ஒரு வணிகப் பரிவர்த்தனைக்காக அவசரமாக பணம் தேவை” என கூறப்பட்டதாக ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி. ரவூப் செலாமட் தெரிவித்தார்.

அந்த நபர், “தனது வங்கிக் கணக்கு தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது” என்று கூறியதால், பெண் எந்தவித சந்தேகமுமின்றி கடந்த வெள்ளிக்கிழமை மூன்று வெவ்வேறு கணக்குகளுக்கு மொத்தம் RM100,000 மதிப்பிலான ஏழு வங்கி பரிமாற்றங்களைச் செய்தார்.

பணம் அனுப்பிய பிறகே, தனது கணவரை சீனாவில் வணிகப் பயணத்தில் இருந்தபோது தொடர்பு கொண்டபோது, அவர் “எனது வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

அப்போது தான் ஆசிரியை தாம் மோசடிக்கு இரையானதை உணர்ந்ததாகவும், உடனடியாக நேற்று போலீசில் புகார் அளித்ததாகவும் ரவூப் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசார் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 (மோசடி குற்றம்) கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments