Offline
Menu
சமூகத்தின் மீதான அக்கறையே ‘TN 2026’ படம்: தம்பி ராமையா
By Administrator
Published on 04/13/2026 18:00
Entertainment

தமிழக அரசியலின் தற்போதைய சூழலையும், எதிர்கால மாற்றங்களையும் கருப்பொருளாகக் கொண்டு உருவாகியுள்ள ‘TN 2026’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பிரபல நடிகர் தம்பி ராமையாவின் கதையில், அவரது மகன் உமாபதி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நட்டி (என்ற) நடராஜ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் குறித்து ‘சினிமா விகடன்’ இதழுக்கு அளித்த நேர்காணலில், கதையாசிரியர் தம்பி ராமையா பகிர்ந்துள்ள சுவாரசியமான தகவல்கள்:

“இன்றைய தலைமுறையினருக்கு 14 – 15 வயதிலேயே அரசியல் குறித்த தெளிவு வந்துவிடுகிறது. அவர்களுக்குத் தமிழக அரசியலின் இரு பெரும் ஆளுமைகளான எம்.ஜி.ஆர் – கலைஞர் கருணாநிதி ஆகியோருக்கு இடையிலான நட்பு மற்றும் அரசியல் முதிர்ச்சியைப் புரிய வைக்கவே இக்கதையை உருவாக்கினேன்.”

“படத்தில் கற்பனையாகச் சில காட்சிகளை எழுதினோம். ஆனால், வியக்கத்தக்க வகையில் அவை இன்றைய நிஜ அரசியலில் அப்படியே பிரதிபலிப்பது எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது.”

வெறும் பணத்திற்காகச் சினிமா எடுக்காமல், சமூகத்திற்குப் பயனுள்ள ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்ற உந்துதலே இந்தப் படம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்:”தளபதி விஜய் ஒரே இரவில் அரசியலுக்கு வரவில்லை. அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் திரையுலகில் 100 எம்.எல்.ஏ-க்களுக்குச் சமமான செல்வாக்கு படைத்தவர். இந்தப் படம் பல்வேறு காலகட்டங்களின் தொகுப்பு என்பதால், முழுமையாகப் பார்க்காமல் எவ்வித முடிவிற்கும் வர வேண்டாம் என அவர் ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார்.

Comments