Offline
Menu
தவறாக ஏறிய ரெயிலில் இருந்து இறங்கிவிட்டேன் – விவாகரத்து குறித்து ஹன்சிகா கருத்து
By Administrator
Published on 04/20/2026 17:00
Entertainment

தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, 2007-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது அவரது சினிமாப் பயணம் சரிவை சந்தித்திருந்தாலும், அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

கடந்த 2022-ம் ஆண்டு இவர், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்தார். ஆனால் திருமணமான சில காலத்திலேயே அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே கடந்த மார்ச் மாதம் இருவரும் சட்டப்படி விவாகரத்துப் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் தனது திருமண வாழ்க்கையைப் பற்றி முதன் முறையாக ஹன்சிகா மோத்வானி மனம் திறந்து பேசியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “நடந்து முடிந்த எதற்காகவும் நான் வருத்தப்படவில்லை. தவறான ரெயிலில் ஏறிவிட்ட பிறகும், அதிலேயே பயணித்து துன்பப்படுவதை விட, அந்த ரெயிலில் இருந்து இறங்கிவிடுவதுநான் சரியான முடிவாக இருக்கும். அதைத்தான் நான் செய்திருக்கிறேன்.

இந்த முடிவு எனக்கு மகிழ்ச்சிதான். என் குடும்பம் எப்போதும், எதற்காகவும் எனக்கு அழுத்தம் கொடுத்ததில்லை. இப்போதும் அவர்கள் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எனவே தற்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார்.

Comments