Offline
Menu

LATEST NEWS

அமேசானையே முந்திய ஸ்பேஸ் எக்ஸ்: உலகின் 5-வது பெரிய நிறுவனமாக சாதனை
By Administrator
Published on 06/20/2026 08:00
News

சமீபத்தில் பங்குச்சந்தையில் நுழைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மின்னல் வேக வளர்ச்சியைக் கண்டுள்ளது. எலான் மஸ்க்கிற்கு சொந்தமான இந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், அமேசான் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி, உலகின் 5-வது மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது. மேலும், ஏஐ தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் நோக்கில், கர்சர் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை ரூ. 60 பில்லியன் டாலருக்கு வாங்குவதாகவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

வர்த்தகத் தொடக்கத்திலேயே இப்பங்கின் மதிப்பு 21 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் சந்தை மூலதனம் 2.15 டிரில்லியன் டாலராக உயர்ந்தது. ஸ்பேஸ் எக்ஸ் பங்கு விலை அதிகரிப்பால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பும் வேகமாக உயர்ந்தது. அந்த நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளைக் கொண்டுள்ள எலான் மஸ்க், உலக வரலாற்றிலேயே 1 டிரில்லியன் டாலர் (கிட்டத்தட்ட ரூ.100 லட்சம் கோடி) சொத்து மதிப்பை எட்டிய முதல் டிரில்லியனர் என்ற சாதனையைப் படைத்தார்.

Comments