2020 -ம் ஆண்டில் உலக அளவில் ஏற்படும் பெட்ரோல் தட்டுப்பாட்டால் பொருளாதார தட்டுப்பாட்டில் உலகமே சிக்கிக்கொள்ளும். மனிதர்கள் தான் வாழ சக மனிதனையே சாகடிக்க , நோகடிக்க துணிவார்கள் எனும் கருவை காமெடியாக சொல்லி வந்துள்ள திரைப்படம். இதில் ‘ஜில்’லாக சித்தார்த்தும், ‘ஜங்’காக அவினாஷ் ரகுதேவனும், ‘ஜக்’காக சனந்தும் நடித்துள்ளார்கள்.
இந்த நிலையில், இந்தப் படம் அமேசன் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளதை இயக்குநர் தீரஜ் வைத்தி அறிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நகராத பொருளை நிறுத்த முடியாத விசை சந்தித்தபோது. ஜில் ஜங் ஜக் (2016) தற்போது அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது” என கூறியுள்ளார்.