Offline
Menu
RON97 மற்றும் மானியமில்லாத பெட்ரோல், டீசல் விலை 5 சென் அதிகரிப்பு!
By Administrator
Published on 08/28/2026 14:00
News

உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் எரிபொருள் விநியோகச் சிக்கல்கள் காரணமாக நாட்டின் எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இன்று முதல் செப்டம்பர் இரண்டு வரையிலான காலக்கட்டத்திற்கு, RON97, மானியமில்லாத RON95, மானியமில்லாத டீசல் ஆகியவற்றின் சில்லறை விலை லிட்டருக்கு 5 சென் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், RON97 விலை 4 ரிங்கிட் 30 காசுகளாகவும், மானியமில்லாத RON95 விலை 3 ரிங்கிட் 82 காசுகளாகவும், மானியமில்லாத டீசல் விலை 4 ரிங்கிட் 72 காசுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், Budi Madani திட்டத்தின் கீழ் தகுதிபெறும் நுகர்வோருக்கான மானிய விலையிலான RON95 ஒரு லிட்டர் 1 ரிங்கிட் 99 காசுகளுக்கும், டீசல் 2 ரிங்கிட் 10 காசுகளுக்கும் எந்தவித மாற்றமுமின்றித் தொடர்ந்து வழங்கப்படும் என்று அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலை, ஹோர்முஸ் நீரிணையின் போக்குவரத்துத் தடைகள் காரணமாக இந்த விலை ஏற்றம் தவிர்க்க முடியாததாகியுள்ளதாகவும், அனைத்து உலக சூழல் சீராகும் வரை எரிபொருள் விலைகளில் ஏற்றத்தாழ்வுகள் தொடரக்கூடும் எனவும் நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Comments